எரிபொருளின் புதிய விலை இன்று பிற்பகல் அறிவிக்கப்படலாம்!!

எரிபொருள் விலை இன்று(15/08/2022) குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார். குறித்த அறிவிப்பின் படி, இந்த மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், எரிபொருள் விலையில் Read More

Read more

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் வீழ்ச்சி….. இலங்கையில் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 120 ரூபாரூபாவிற்கு வழங்க முடியும்!!

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை அதிகளவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் இதனால் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.   உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை, நாளொன்றுக்கு Read More

Read more

அடுத்த சில வாரங்களில் ஏழு எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன….. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!!

ஏழு எரிபொருள் கப்பல்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், “40 ஆயிரம் மொற்றி தொன் டீசல் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் வரும். கழிவு எண்ணெயை ஏற்றிய கப்பல் 10 ஆம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடையில் வரும். மற்றுமொரு டீசல் கப்பல் 19 ஆம் திகதி வருகிறது. 13 ஆம் Read More

Read more

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கும் நிலையில் எரிபொருள் விலை !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலைவரப்படி ஒரு பரல் கச்சா எண்ணெய் விலை 124 டொலர்களை தாண்டியது. கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், உலக சந்தையின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என துறைக்குப் பொறுப்பான அமைச்சு அறிவித்துள்ளதால் இந்த மாதம் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read more