நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!!

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நேற்று (09) இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (மே – 12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.   அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.   இன்று நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் Read More

Read more

தென்னிலங்கையில் வெடித்த கலவரம்….. 7 பேர் உயிரிழப்பு – வெளிவரும் பகீர் தகவல்கள்!!

நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   Read More

Read more

பிறப்பிக்கப்பட்டது உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்!!

கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைப்படும் வகையில் காவல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேல் மாகாணம் முழுவதும் இந்த ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு Read More

Read more

ஊரடங்கு புறக்கணிப்பு-கொழும்பில் இன்றிரவு பல இடங்களில் மக்கள் போராட்டம்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றிரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நுகேகொடையில் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மஹரகம மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Read more

ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமா? – காவல்துறை பேச்சாளர் வெளியிட்ட தகவல்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நாளை காலை 6 மணிக்கு மேல் நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அறிவித்தபடி ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும் என சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் அஜித் ரோஹண Read More

Read more

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் விசேட அறிக்கை!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

பிறப்பிக்கப்பட்டது நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு!!

நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய இன்று மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!!

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முப்படையினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை அடக்க ஒடுக்க இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் அவசரகால சட்டம் கோட்டாபயவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read More

Read more

மீண்டும் பயணத்தடை/பொது முடக்கமா….. MOH வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அல்லது பயணத்தை ஒன்றிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுகாதார சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடமிருந்து நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

சீனாவின் சியான் நகரில் முழு ஊரடங்கு!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீனாவின் சியான் (Xi’an) நகரில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக, வீட்டில் ஒரு நபர் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, தற்போது சியான் நகரில் தான் கடுமையான Read More

Read more