திடீரென உள்வாங்கப்பட்ட கடல் நீர்….. சுனாமி அச்சத்தில் மன்னார் மீனவர்கள்!!

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இன்று(22/05/2024) அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளன என நேரில் பார்த்தவர்கள் கூறியதாக பிரபல தென்னிலங்கை Read More

Read more

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. விடுக்கப்பட்ட்து சுனாமி எச்சரிக்கை!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாநிலத்தில் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

கொழும்பிற்கு வருவோருக்கு பொலிஸார் வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்!!

தலைநகர் கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தலொன்றை வெளியிட்டுள்ளனர். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தேவைகளுக்காக மக்கள் தலைநகர் கொழும்பிற்கு வருகின்றனர். காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதனை அவதானிக்க முடிவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் வேறு மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மாலை கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பாரியளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!!

சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் தெலிங்கா நகரில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆயினும், மக்கள் நெருக்கம் குறைவான பகுதியிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் வரை எந்த கிராமங்களும் இல்லை என தெலிங்கா நகர அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் தெலிங்கா நகரம் மற்றும் Read More

Read more

பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் பாதிப்பு நாட்டில்….. கலாநிதி கலா பீரிஸ், கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலாநிதி விசாகா சூரியபண்டார மறறும் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கருத்து!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாட்டின் பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் பங்கம் ஏற்படும் அபாயம் நிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.   பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவதால், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   நாட்டில் பகலில் மின்சாரம் தடைப்படாத போதே பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இரவில் வீதி விளக்குகளை அணைப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும் என நாடாளுமன்ற Read More

Read more

சமையல் எரிவாயுக் கொள்கலனுக்குள் மர்ம பொருள்!!

சாதாரண வெற்று எரிவாயுக் கொள்கலன் ஒன்று காணப்பட வேண்டிய நிறையை விடவும் 2.5 கிலோ கிராம் அதிக நிறையுடைய வெற்று எரிவாயுக் கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த எரிவாயு விற்பனையாளர் அதனை பரிசோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட எரிவாயு விற்பனையாளர், “இந்த எரிவாயுக் கொள்கலன் 12.5 கிலோ கிராம் எரிவாயுவுடன் வருகிறது. வெற்று எரிவாயுக் கொள்கலன் 12.2 கிலோ கிராம் எடை கொண்டது. எரிவாயு கொண்ட முழுமையான கொள்கலன் 24.7 கிலோ Read More

Read more

மலையக மக்களுக்கு தொடரும் பேராபத்து எச்சரிக்கை!!

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஆறு அடி வரையும் மற்றும் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், Read More

Read more

36 மணித்தியாலங்களில் தாழமுக்கம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம்…..வடக்கிற்கு ஆபத்து!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் Read More

Read more

வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சியின் தாழ் நிலப் பகுதிகள்!!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்களின்  வீடுகளுக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளது. கடந்த காலத்தில் நிரந்தர வீட்டுத்திட்டங்களுக்கு உள் வாங்கப்பட்டு ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்பட்டு மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ள மக்கள் Read More

Read more

கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் மிக அதிகரிப்பு….. எந்த நேரத்திலும் வான்பாயலாம்!!

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக கிளிநொச்சி – கனகாம்பிகை  குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் எந்த நேரத்திலும் வான்பாயலாம் என கிளிநொச்சி மக்களுக்கு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. குறித்த குளத்தின் நீர்மட்டம் 10அடி 6 அங்குலத்தை கொள்ளளவாக கொண்டது. ஆனால் தற்போது 9 அடி 9 அங்குலமாக  நீர்மட்டம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும்  மழை பெய்யுமாக இருந்தால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலம் Read More

Read more