ஓய்வுபெறும் சட்டமா அதிபர் – ஜனாதிபதியும் பிரதமரையும் சந்தித்து முக்கிய பேச்சு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். தப்புல டி லிவேராவின் சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவரது ஓய்வு வாழ்க்கைக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதேவேளை, அலரி மாளிகையில் பிரதமரையும் ஓய்வுபெறும் சட்டமா அதிபர் நேற்று சந்தித்தார். தப்புல டி லிவேரா, இலங்கையின் 47ஆவது சட்டமா அதிபர் ஆவார். பதில் Read More
Read more