பயணிகள் பேருந்து – கார் மோதி விபத்து….. 34 பேர் உடல் கருகி ஸ்தலத்திலேயே பலி!!

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் பேருந்து-கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 34 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அல்ஜீரியாவின் டமன்ராசெட் மாகாண சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தவேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் இந்த பேருந்து அடோல் கிராமச்சாலையில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. “பேருந்திற்குள் இருந்த பயணிகள் Read More

Read more

இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன யுவதி சடலமாக மீட்கப்பட்டார்!!

பேருவளை கடற்பரப்பில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 25 வயதுடைய இளம் பெண்ணின் சடலத்தை மீனவர்கள் குழுவினர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்டுள்ளனர். பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பேருவளை காவல்துறையினருக்கு கடந்த புதன்கிழமை(01/03/2023) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (04/03/2023) காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழு கரையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள கடலில் குறித்த பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

பெண் பிரதம நிருவாக அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை….. கணவர் கைது!!

பொலனறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் படுகொலை செய்யப்பட்ட பெண் பிரதம நிர்வாக அதிகாரியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொலன்நறுவை தல்பொத்த என்ற இடத்தில் வசித்து வந்த 42 வயதான எம்.எல்.யமுனா பத்மினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.   பொலனறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் 42 வயதுடைய பெண் பிரதம நிருவாக அதிகாரி நேற்று முன்தினம் (04/07/2022) கத்தியால் குத்தி Read More

Read more

மர்மமான முறையில் உயிரிழந்த  தந்தையும் மகளும் (படங்கள்)!!

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த  தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். களுத்துறை, ஹீனடியங்கல, கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது மகள் சமரசிங்க சச்சித்ரா ஹன்சமலி ஜயசிங்க (33) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். குறித்த வீட்டில் தந்தையும் மகளும் தங்கியிருந்ததுடன், தந்தை நாற்காலியில் சடலமாக கிடந்ததாகவும், மகள் அறையில் தரையில் சடலமாக கிடப்பதாகவும், காவல்துறை அவசர பதில் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை Read More

Read more

பண்டத்தரிப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 17வயது மாணவி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். யா/ மகாஜன கல்லூரியில் க.பொ.த.(சா/த) – 2021 இல் கல்விபயிலும் மாணவி செல்வி சுதர்சன் சதுர்சிகா என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளா‌ர். இன்னும் ஒருசில நாட்களில் அதாவது இமமாதம் 23 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக மிக்க ஆர்வத்துடன் கற்றுவந்த மாணவியை காலன் கவர்ந்துவிட்டான். கல்விவானில் Read More

Read more

வெள்ளவத்தை கடற்கரையில் தலையின்றி சடலம் கரையொதுக்கம்!!

கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லை!!

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். சூடுபத்தினசேனையில் புதைப்பதற்கு எந்த விதமான பணமும் அறவிடுவதில்லை. ஆனால் குறித்த உடலத்தை எரிப்பதாயின் மன்னம்பிட்டியில் உள்ள தகன சாலைக்கு 12 ஆயிரம் கட்டவேண்டிய நிலையுள்ளது. அதனையும் கட்ட கூடிய வசதி இல்லாதவிடத்து அரசாங்கத்தினால் இலவசமாக எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்காக 40 Read More

Read more