மோட்டார் சைக்கிள் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசர் மோதி விபத்து….. துடிதுடித்து இறந்த கணவன் – ஆபத்தான நிலையில் மனைவி!!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று(19/08/2023) மதியம் மோட்டார் சைக்கிளும் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது காவல்துறையினரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புவனேஸ்வரன் மனோஜ் (வயது  31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார். மன்னாரை சேர்ந்த 26 வயது  மனைவி Read More

Read more

இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன யுவதி சடலமாக மீட்கப்பட்டார்!!

பேருவளை கடற்பரப்பில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 25 வயதுடைய இளம் பெண்ணின் சடலத்தை மீனவர்கள் குழுவினர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்டுள்ளனர். பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பேருவளை காவல்துறையினருக்கு கடந்த புதன்கிழமை(01/03/2023) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (04/03/2023) காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழு கரையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள கடலில் குறித்த பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

யாழ் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்றைய தினம்(06/07/2022) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது கடலில் சடலமொன்று மிதப்பதைக் கண்டுள்ளனர். அதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து, தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் சடலத்தை பார்வையிட்டுள்ளார். இந்நிலையில், முதியவர் தீவகப் பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளார். Read More

Read more

மன்னார் நொச்சிக்குளத்தில் இரட்டை கொலை…. பரிதாபமாக பலியான சகோதரர்கள் – ஆபத்தான நிலையில் மேலும் இருவர்!!

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(10/06/202) காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம்காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த படுகொலை சம்பவத்தில் நொச்சி குளத்தைச் சேர்ந்த Read More

Read more

நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!

தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் . கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு, சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் Read More

Read more

யாழ் – புத்தூர் பகுதியில் கணவன், மனைவி இருவரும் பரிதாபகரமாக பலி!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியில் நீராடிய போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் சென்ற நிலையில் Read More

Read more

தலையில்லாமல் ஆணின் சடலம் மீட்பு!!

காலி சமுத்திர மாவத்தைக்கு அருகில் தலையற்ற நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்கதாக இந்த சடலம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!!

புத்தளம் – உடப்பு, பாரிப்பாடு கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று (1) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்துள்ள பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

கடந்தப்பட்ட நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!!

கொழும்பு – நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more