பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர் யாழ் போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதன்படி, இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை கூட செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும் Read More

Read more

47 KG கட்டியை பெண்ணின் வயிற்றிலிருந்து வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை!!

இந்தியாவின் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் பெண்ணின் வயிற்றிலிருந்து 47 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 56 வயது பெண் சுமார் 18 வருடங்களாக இந்த கட்டியோடு வாழ்ந்து வந்திருக்கிறார். இந்தியாவில் இதுவரையிலும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டதில் இதுதான் மிகப்பெரிய கட்டி என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது அதனுடன் சேர்த்து சில திசுக்கள் மற்றும் கூடுதலான சதைப்பகுதி உள்ளிட்டவையும் அகற்றப்பட்டன. மொத்தத்தில் 54 கிலோ எடை உடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Read More

Read more

எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்மானித்துள்ளோம்….. GMOA!!

எதிர்வரும் திங்கட்கிழமை (21) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் பிரசாத் (Vasan Ratnasingam Prasad) தெரிவித்தார். எவ்வாறாயினும், மத்திய குழு மேற்கொண்டுள்ள அடையாள வேலை Read More

Read more

தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா?…… இறுதி முடிவு இன்று!!

நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று(24) தீர்மானிக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ள நிலையில், இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இன்றைய கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

மூன்றாவது நாளாகவும் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (23) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் (21) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் எவ்வித இடையூறுமின்றி சேவை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Read more

முன்றாவது டோஸ் தடுப்பூசி தொடர்பில் வெளியான செய்தி!!

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் Read More

Read more

இலங்கை முழுவதும் 209 மருத்துவர்களுக்கு கொரோனா! பலர் அவசர சிகிச்சைப்பிரிவில்!!

நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 30 – 40 மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பால் மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கேகாலை பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் ராகம மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் Read More

Read more