உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். 2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான Read More

Read more

சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுமதி அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளாத மாணவர்களை  WWW.DOENETS.LK  ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அனுமதி அட்டையின் பிரதியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிரவரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read more

உயர்தர, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் கல்வியமைச்சு வெளியிடட தகவல்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அத்துடன், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும், பெறுபேறு வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றன. அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக சில பாடசாலைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த Read More

Read more

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. பரீட்சை திணைக்களத்தின்  www.doenets.lk என்ற அதிகாரபூர்வ இணைய தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த பரீட்சை நடாத்தப்படவிருந்த போதிலும் கொரோனா பெருந்தொற்று நிலைமைகளினால் பரீட்சை நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் சாதாரண Read More

Read more

எதிர்வரும் 20ஆம் திகதியுடன் ஆசிரியர்களுக்காகான விண்ணப்பத்திகதி நிறைவு!!

நடைபெறவுள்ள 2021 (2022) ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கபளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடுவர்களை தெரிவு செய்வதற்காக இணையவழியின் ஊடாக விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது. கீழ்காணப்படும் எந்தவொரு முறையினூடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், குறித்த கட்டமைப்புகளுக்கு பிரவேசிப்பதற்காக விண்ணப்பதாரிகளின் Read More

Read more

207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்!!

இம்முறை க. பொ. த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறொருவர் பரீட்சைக்கு தோற்றியது தொடர்பாக பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் ஆறு பதிவாகியுள்ளன. மேலும், கையெழுத்து மாற்றம், விடைத்தாள் ,கையடக்க தொலைபேசிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் ஒரேமாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சை முறைகேடுகள் தொடர்பாக, பரீட்சைத் திணைக்களத்திற்கு 4,174 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன், அதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதன் Read More

Read more

சாதாரண தர பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி !!

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.   செயன்முறை பரீட்சைகளை தவிர்த்து வெளியிட தீவிரமாக ஆலோசித்துவருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 622,000 மாணவர்களில், 170,000இற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறை பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, Read More

Read more