40,000 mt டீசலுடன் இன்று நாட்டை வந்தடையவுள்ளது கப்பலொன்று!!

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவியின் கீழ் இந்த எரிபொருள் இலங்கைக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read more

பங்களாதேஷ் கொடுத்த 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தது இலங்கைக்கு!!

பங்களாதேஷ் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மூன்று மாதங்களுக்குள் செலுத்தும் வகையில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டது. அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய பங்களாதேஷ் மேலும் ஒரு ஆண்டுக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளது. அந்நிய செலாவணி Read More

Read more

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் USD உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டம்!!

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் என்பனவும் அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளன. அதனடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை Read More

Read more

உலகவங்கி இலங்கை நிலவரம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!!

தாங்க முடியாத கடன் மற்றும் கொடுப்பனவு சமநிலை சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.   நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் உலக வங்கி கூறுகிறது.   உயர்மட்ட கடன் மற்றும் கடன் சேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், வெளிப்புற ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கும் அவசரக் கொள்கை நடவடிக்கை தேவை என்று உலக வங்கி Read More

Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமெரிக்கா ஆலோசனை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அறிவார்ந்தவர்கள் மூலம் அரசாங்கம் தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.   இலங்கை வரலாற்றில் ஒவ்வொருவரினதும் குரல் தற்போது முக்கியமானதாக கருதப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.   அத்துடன், போராட்டக்காரர்கள் அமைதியாகவும், அவர்களது குரல்களை மாற்றத்திற்காகவும் ஒற்றுமைக்காகவும் உயர்த்துமாறு தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   இந்நிலையில், இலங்கை அரசாங்கம் பிரச்சினையை அடையாளம் கண்டு அதனை அறிவார்ந்தவர்கள் மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கைக்கான Read More

Read more

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

பாலமா பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பால் மா இறக்குமதியாளர்களுக்கு போதுமான அளவு டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதால் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார். இதனால், சந்தையில் பால் மாவுக்கான தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், கடந்த ஒரிரு மாத காலமாக நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவின் Read More

Read more