மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம் (புகைப்படங்கள்)!!

மட்டக்களப்பு கதிரவெளியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். நேற்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதுடைய ஜீவானந்தம் நிமால்ராஜ், 23 வயதுடைய புலேந்திரன் அனுஜன்மற்றும் 25 வயதுடைய தங்கவேல் தகிசன் போன்ற இளைஞர்களே இவ்வாறு கடலில் மூழ்கி மரணமடைந்திருந்தார்கள். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

கடலில் மூழ்கிய பாடசாலை மாணவர்கள் மூவர்….. இருவர் மாயம் ஒருவர் தீவிர சிகிச்சையில்!!

3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய இருவரின் நிலை தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுமார் 17 முதல் 18 வயது வரை மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது Read More

Read more

யுவதியை காப்பாற்ற சென்ற இளைஞன் மரணம்….. யுவதி உயிருடன் மீட்பு!!

சீதாவக்க ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அவிசாவளை – தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றிருந்த ஒருவரை காப்பாற்ற நீரில் குதித்த ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாத்திரை குழுவொன்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாத்திரை குழுவை சேர்ந்த பெண்ணொருவர் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற Read More

Read more

நீராடச்சென்றவர் சடலமாக கரையொதுங்கினார்!!

திருகோணமலை – நிலாவெளி கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) முற்பகல் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் கூறினர். கண்டி – தலாதுஓயா பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே நேற்று (16) பிற்பகல் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார். மாத்தளையிலிருந்து சுற்றுலா சென்றிருந்த சிலர், நேற்று (16) பிற்பகல் நிலாவெளி கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவரை காப்பாற்ற 2 நண்பர்கள் Read More

Read more

பரீட்சை எழுதிவிட்டு நீரில் மூழ்கி இறந்த பத்து வயது சிறுமி!!

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு கடலில் நீராட சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை திருகோணமலை இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. பாசல்மாவத்த -ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஸானி ஹன்சலா (10 வயது) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதுடன் நீரில் மூழ்கிய சிறுமி கன்னியா வீதி- மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அயோத்யா (10 வயது) எனவும் தெரியவருகின்றது. நேற்றையதினம் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு Read More

Read more