மதுபோதையில் தள்ளாடிய அம்புலன்ஸ் வண்டி….. மூன்று முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்து – மூவர் படுகாயம்!!

மதுபோதையில் நோயாளிகாவு வண்டியை(Ambulance) செலுத்தியதன் காரணமாக ஹட்டன் அளுத்கம பகுதியில் முச்சக்கரவண்டிகளுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த நோயாளிகாவு வண்டியானது டிக்கோயா பகுதியில் இருந்து ஹட்டன் நகரை நோக்கிச்சென்றது.   அவ்வேளை, இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி, Read More

Read more

விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளை பயன்படுத்துங்கள் – உருவாக்கப்படுகிறது புதிய சட்டம்….. அஜித் ரோஹண!!

மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ளார். வாகன சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே வீதி விபத்துகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்தோடு, வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more