காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைகள்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. அதனால் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைத்துள்ளோம். அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

குழந்தையை தூக்கி சென்ற கழுகு….. இணையத்தில் வைரலாகி பதற வைத்த காணொளி!!

கழுகு ஒன்று இரையாக குழந்தையை தூக்கி செல்ல முயன்ற காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பதற வைத்து வருகின்றது. இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான Instagram பதிவை பார்வையிட இங்கே அழுத்துக. அதில் ஒரு பார்க்கில் தன் குழந்தையுடன் வந்த தந்தை குழந்தையை பார்க்கில் அமர வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பேக்கில் தான் கொண்டு வந்த ஏதோ பொருளை எடுக்க சென்றிருந்தார்.

Read more