ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. விடுக்கப்பட்டது சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அச்சமடைந்தனர். இதை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் திருப்பதியில் குறைந்த அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது திருப்பதிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு Read More

Read more

இந்தோனேசியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29/08/2023) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சுனாமி அபாயம் ஏதுவும் இல்லை என இந்தோனேசிய மற்றும் அமெரிக்க புவியியல் முகவர் நிலையங்கள் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Read more

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்….. இதுவரை வெளியாகாத சேத விபரங்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று(16/08/2023) காலை 6.45 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read more

சீனாவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. தரைமட்டமாகிய 126 கட்டிடங்கள் – 21 பேர் படுகாயம்!!

சீனாவில் இன்று(06/08/2023) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டொங் மாகாணம் டெசோவ் நகர் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் நேற்று(05/08/2023) ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், நேற்று(05/08/2023) நள்ளிரவில் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இன்று(06/08/2023) அதிகாலையில் ரிக்டர் Read More

Read more

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. விடுக்கப்பட்ட்து சுனாமி எச்சரிக்கை!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாநிலத்தில் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நியூஸிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

நியூஸிலாந்தில் நேற்று(31/05/2023) 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

Read more

பனாமாவில் திடீரென அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்….. இன்னமும் சேத விபரங்கள் கணக்கிடப்படவில்லை!!

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனமா – கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவிரவல்லை.

Read more

இலங்கையில் இன்றும் 3.2 ரிக்டர் அளவில் நான்காவது நிலநடுக்கம்!!

இலங்கையில் இன்றைய தினம்(22/02/2023) சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியிலேயே இன்று(22/02/2023) மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று(22/02/2023) முற்பகல் 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. புத்தல பிரதேசத்தில் 3.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இதேவேளை, குறித்த பகுதியில் அண்மையில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

இலங்கையில் மீண்டும் இன்று 2.3 ரிச்டர் அளவு நில நடுக்கம்….. இது எதற்கான அறிகுறி!!

இலங்கையில் மீண்டும் இன்றையதினம்(11/02/2023) காலை நில நடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட வெல்லவாய, புத்தலையில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் இடம்பெற்றுள்ளதுடன், எந்தவிதமான உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம்(10/02/2023) மொனராகலை மாவட்டத்தில் 3.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் Read More

Read more

இலங்கையிலும் மூன்று பகுதிகளில்….. சுமார் 3 மெக்னிடியூட் அளவு திடீர் நிலநடுக்கம்!!

இலங்கையில் வெல்லவாய, புத்தல, பெல்வத்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், உயிர் அல்லது கட்டட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பயப்பட தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சிறு அளவிலான நில அதிர்வானது நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Read more