இலங்கையில் மீண்டும் இன்று 2.3 ரிச்டர் அளவு நில நடுக்கம்….. இது எதற்கான அறிகுறி!!

இலங்கையில் மீண்டும் இன்றையதினம்(11/02/2023) காலை நில நடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட வெல்லவாய, புத்தலையில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 2.3 ரிச்டர் அளவில் இடம்பெற்றுள்ளதுடன், எந்தவிதமான உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம்(10/02/2023) மொனராகலை மாவட்டத்தில் 3.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் Read More

Read more

இலங்கையிலும் மூன்று பகுதிகளில்….. சுமார் 3 மெக்னிடியூட் அளவு திடீர் நிலநடுக்கம்!!

இலங்கையில் வெல்லவாய, புத்தல, பெல்வத்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், உயிர் அல்லது கட்டட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பயப்பட தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சிறு அளவிலான நில அதிர்வானது நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Read more

தென் பகுதிக்கு அண்மையில் 4.1 மெக்னிடியூட்டில் பதிவாகியுள்ள நிலநடுக்கம்!!

ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இதை அறிவித்துள்ளது. 4.1 மெக்னிடியூட்டில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more

ஹம்பாந்தோட்டையில்  நில அதிர்வு!!

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர பகுதியில்  நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10.38 மணியளவில் 2.4 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது. இதனால் ஏற்படடுள்ள சேத விபரம் தொடர்பில் எதுவும் வெளியாகவில்லை.

Read more