உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு – இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றன…… கல்வி அமைச்சர்!!

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகாத நிலையில் பரீட்சைகள் நிறைவடைந்து ஆறுமாதங்கள் கடந்து விட்டது.   இந்நிலையில், உயர்தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடாக உறுதிப்படுத்திக் கொண்ட இந்தத் தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு இன்று(03/08/2022) அறிவித்துள்ளார். Read More

Read more

பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை….. கல்வி அமைச்சு!!

அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கப்பல் வருவது மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் செய்தியே இதற்குக் காரணமாக கூறப்படுகின்றது.   எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா Read More

Read more

உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள். குறித்த வைத்தியசாலையே பரீட்சை நிலையமாகவும் செயற்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சை நீண்ட கால தாமதமான பரீட்சை என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காகவே இவ்விசேட Read More

Read more

முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் ஏப்ரலில் ஆரம்பம்!!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardane) தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மற்றும் பரீட்சைகள் சம்பந்தமாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று கண்டியில் விடயங்களை தெளிவுப்படுத்தினார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலை தவணை முடிவடைந்து மீண்டும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. பாடசாலை கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்யப்படும். 5 Read More

Read more

புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்!!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார். இந்நிலையில், Read More

Read more

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி – ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். எனவே, தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாட்டை தொடர்ந்தும் புறககணிக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை (22) கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண திங்கள்கிழமை (26) அமைச்சரவையில் ஒரு திட்டத்தை சமர்ப்பிப்பதாக Read More

Read more

பணி பகிஸ்கரிப்பில் குதித்த ஆசிரியர்கள்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்லைன் முறையில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் நடத்தப்படுகிறது. அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றி போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவே மேற்படி பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றம்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக  இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Read more

13 வருட கால கல்வி தொடர்பில் – கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்

தற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற் கொண்டே, இந்த விடயம் தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ன. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10 Read More

Read more

6 பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது! வெளியான அறிவிப்பு

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நாளை 06 பாடசாலைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், காமினி தேசிய பாடசாலை, தமிழ் கத்தோலிக்கக் கலவன் பாடசாலை, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாசம் மற்றும் முஸ்லிம் மகா வித்தியாலயம் இவ்வாறு மூடப்படுகின்றதாக வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்தார். இந்த பாடசாலைகளை மீள திறக்கின்ற திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை அம்பாறை நகரிலுள்ள பாடசாலைகள் Read More

Read more