நாட்டில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும்!!

இலங்கையில் அடுத்த  ஆண்டில் (2024) பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். அரசு மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதீட்டு ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Read More

Read more

நாளை முதல் குறைகின்றன 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்!!

நாளை (17/08/2023) முதல் 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 1 கிலோ சோயாவின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 625 ரூபாவாகும். நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் Read More

Read more

இன்று முதல் குறைந்தன 6 பொருட்களின் விலைகள்!!

இலங்கையில் 6 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று(24/05/2023)முதல் நடைமுறையாகும் வகையில் சதொச நிறுவனம் 6 பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன் புதிய விலைகளின் விபரமும் குறைக்கப்பட்ட விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விலை 400g பால்மாவின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1030 ரூபா. 1 கிலோகிராம் காய்ந்த மிளகாய் 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1350 ரூபா. சிவப்பு பருப்பின் 1 கிலோகிராமின் விலை 10 Read More

Read more

இன்று முதல் ‘சதொச’ நிறுவனத்திலும் விலைகள் அதிகரிப்பு!!

சதொச நிறுவனத்திலும் பொருட்களின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று  தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை அதிகரிப்புக்கு ஏற்ப சதொசவின் நாடளாவிய கிளைகளில் அததியாவசியப் பொருட்கள் விற்பனை தற்போது செய்யப்படுகின்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பொருட்கள் அத்துடன், முன்னரை விடவும் குறைந்தளவான பொருட்களையே சதொச தனது கிளைகள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. அதன் காரணமாக ஏராளம் Read More

Read more

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!!

இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த எரிபொருள் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அதிபர் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இனம் கண்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றார்.  

Read more

அத்தியாவசிய சேவைகள் நாளை வழமை போல் இயங்கும்….. நாங்கள் போராடடத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை!!

நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய அரசியல் ஆதாயங்களை அடைவதற்காக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். தங்களுடைய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (03/04/2022) மாலை கொழும்பு கோட்டையில் Read More

Read more

மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை அவசியம்….. GMOA!!

இலங்கையில் மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும், “விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை நடைமுறையில் உள்ளபோதும், சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை. அவ்வாறு மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் Read More

Read more

பருப்பின் விலை 1,000 ரூபா….. மேலும் அதிகரிக்கும் விலைவாசி!!

நாட்டில் கடந்த சில நாட்களாக விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதிலும், விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றமையால் மக்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் தற்போது நாட்டில் ஒரு Read More

Read more

இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளது….. புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள்!!

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பில் இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்புகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை கோதுமை மாவிற்கான Read More

Read more

சந்தைகளில் சகல ரக அரிசிகளின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் (P.K Ranjith) தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை Read More

Read more