திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது தங்கியுள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் மகிந்தவின் குடும்பத்தினர் தங்கியுள்ள நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read More
Read more