சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்தி வைப்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு!!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி 23ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கப்படவுள்ளது என நேற்று செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவ்வாறான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read more