விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளை பயன்படுத்துங்கள் – உருவாக்கப்படுகிறது புதிய சட்டம்….. அஜித் ரோஹண!!
மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ளார். வாகன சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே வீதி விபத்துகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்தோடு, வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read more