பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிபபு!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறை மற்றும் தனியார் வீடொன்று உட்பட இன்று காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு வெடித்துள்ளது. எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் துன்னாலை வடக்கு அமிர்தலிங்கம் பவநந்தினி என்பவரின் வீட்டிலும் காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

ஏமனில் விமானநிலைய நுழைவு வாயில் அருகே பாரிய வெடி விபத்து…. சம்பவ இடத்திலேயே 12பேர் உடல் சிதறிப் பலி!!

ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா, என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை அன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய ரக வாகனம் வெடித்துச் சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் Read More

Read more