தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அம்பியுலன்ஸ் உட்பட ஒன்றுடன் ஒன்று மோதிய 5 வாகனங்கள்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விபத்தானது கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களுள் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
Read more