இலங்கையில் மீண்டும் கொடிய நோய்….. சுகாதார மேம்பாட்டுப் பணியகமிடமிருந்து அவசர எச்சரிக்கை!!

மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கல்முனைப் பிரதேசங்களில் மலேரியா நோய்க்கிருமியான Anopheles stephensi அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் ஜீவனி ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று(29/06/2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.

Read more

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகளெனின் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்….. அவசர எச்சரிக்கை!!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மேலும், தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 02 நாட்களுக்குப் பின்னரும் மருத்துவரை சந்திக்க தாமதம் ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, சில நோயாளர்கள் பல்வேறு Read More

Read more

சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் “இன்புளுவென்ஸா” மற்றும் “கொரோனா”….. மிக்க கவனமாக இருக்க வேண்டுகோள்!!

இலங்கையில் தற்போதைய காலத்தில் டெங்கு இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான தொற்று நோய்கள் சிறுவர்களுடையே வேகமாக பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார். தற்சமயம் இலங்கையில் கொரோனாத் தொற்று சமூகத்தில் உள்ளது. அதனை வைத்திய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனாத் தொற்றாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் Read More

Read more

பெற்றோர்களே எச்சரிக்கை காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்!!

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கையின் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சிறுவர்களுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் . தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தரம் 01 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 02 வருடங்களாக வெளியில் வராத சிறுவர்கள் தற்போது சுற்றுச்சூழலுக்குள் வந்துள்ளனர். இந்நிலையில், சிறிய சளி சிறுவர்களிடையே Read More

Read more

ஒன்பது மாதப் பெண் குழந்தை யாழ் போதனா மருத்துவமனையில் மரணம்!!

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட 9 மாதப் பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து நேற்று காலை பெற்றோர் நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் மாற்றப்பட்டுள்ளது. எனினும், குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு வரும் Read More

Read more

“லஸ்ஸா காய்ச்சல்” என்ற புதிய வகை வைரஸ் தொற்று….. பச்சிளம் குழந்தை மரணம்!!

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் (Lassa Fever) என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்கு தொற்றியமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரஸூம் லஸ்ஸா வைரஸூம் உறவு முறை தொடர்புடையவை என்பதால், இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன. இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் Luton & Dunstable மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் Read More

Read more

எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நீங்களே முடிவெடுக்க வேண்டாம்….. டொக்டர் ஹேமந்த ஹேரத்!!

48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை  விடுப்பதாக தெரிவித்தார். மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று Read More

Read more

தீடீர் காய்ச்சலால் சிறுவன் பலி – யாழில் துயரம்!!!!

தீடீர் காய்ச்சல் காரணமாக நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார். உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலுடன் கடும் உடற் சோர்வு காணப்பட்டுள்ளது. அதனால் அவர் நேற்று இரவு 9.30 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி Read More

Read more