Sri lankan Airlines தாமதம்….. இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!

சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அண்மைய தாமதத்தினால் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக எட்டு விமானங்கள் தாமதமாக வந்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். சிறி லங்கன் எயார்லைன்ஸின் உரிமைகளைப் Read More

Read more

22 வயது யாழ்ப்பாண இளைஞர் போலி ஆவணங்களுடன் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார். எனினும், இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது Read More

Read more

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………………. எதிர்வரும் வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக Read More

Read more

232 பேருடன் டெல்லியில் இருந்து San Francisco சென்ற AI 173 விமானத்தில்….. நடுவானில் இயந்திர கோளாறு!!

டெல்லியில்(Dhelli to) இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு(San Francisco) புறப்பட்டு சென்ற AI 173 என்ற ஏர் இந்திய விமானம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. விமானம் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்தில்  தரையிறங்கி உள்ளதுடன் பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளதாக இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், விமானத்தில் ஆய்வு பணிகள் Read More

Read more

சக விமானியின் பயத்தால் ஏற்பட்ட விபத்து….. இரு துண்டாகிய பேருந்து – விமான, பேருந்து பயணிகள் என 60 இற்குமேல் மரணம்!!

கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட பேருந்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235 க்கு நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் Read More

Read more

வேலைக்க வெளிநாடு சென்று வந்து மீண்டும் செல்ல உள்ளோருக்கு புதிய சட்டம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.   அதனடிப்படையில், Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கியின் விமானம்!!

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம் ஒன்று நேற்று(04/07/2022) விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கி விமான சேவைக்கு சொந்தமான 330 ரக சரக்கு விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியேயின் இஸ்தான்புல்லில் இருந்து சரக்குடன் 330 ரக சரக்கு விமானம் நேற்று(04/07/2022) இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் 45 மெற்றிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று(04/07/2022) இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு புறப்படுவதற்கு Read More

Read more

கட்டுநாயக்கவில் அவசரமாக தரைங்கியதால் ‘வானில் நேருக்குநேர் மோதாமல் தப்பிய வெளிநாட்டு விமானங்கள்!!

லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 275 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், ஹீத்ரோவில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் அங்கராவின் துருக்கி வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.   அங்கரா விமானக் கட்டுப்பாடு UL 504 Read More

Read more

யாழ் – பாண்டிச்சேரி சரக்கு படகு சேவை ,பலாலி – திருச்சி விமான சேவை என்பவற்றுக்கு அமைச்சரவையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும் பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் நேற்று (13/06/2022) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக Read More

Read more

ரஷ்யாவின் “ஏரோஃப்ளோட்” விமான பிரச்சினை….. இலங்கை மீது கடும் அதிருப்தியில் ரஷ்யா – மன்னிப்பு கோரும் அரசியல் பிரபலங்கள்!!

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஏரோஃப்ளோட் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (07/06/2022) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார். அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க Read More

Read more