யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………………. எதிர்வரும் வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக Read More

Read more

நாட்டில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள இன்னொரு விமான நிலையம்!!

இரத்மலானை விமான நிலையம் இம்மாதம் 29ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(DV Chanaka)தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். தென்னிந்தியா மற்றும் மாலைதீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன என்றார். இரத்மலானை விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மேலும் பல சர்வதேச Read More

Read more

டொலர்களில் கட்டணம் செலுத்தாவிடின் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை!!

டொலர்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் விமானங்களுக்கு எரிப்பொருள் வழங்கப்படாது என எரிசக்தி அமைச்சு, சிறிலங்கன் விமான சேவைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் அமைச்சு தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதன் அரச வங்கி வலையமைப்பின் ஊடாக டொலர்களை செலுத்துமாறு தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாகவும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா (KTR Olga) தெரிவித்துள்ளார்.  

Read more