பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more

நவம்பர் 4 முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவை வழங்கும் ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம்!!

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கைக்கான நேரடி விமான சேவையை வெளிநாடொன்றின் விமான நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி ரஷ்யாவின் எரோபுளொட் (Aeroflot) என்ற விமான சேவை நிறுவனமே எதிர்வரும் நவம்பர் 4 ஆம்திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. Read More

Read more

21 ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவைகளும் இரத்து!!

மே மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார்.

Read more