எரிபொருள் பிரச்சினைக்காக ஜனாதிபதி  கோட்டாபய உரிய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள விசேட பணிப்புரை!!

கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.   அத்துடன், நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் Read More

Read more

600 ரூபா விலையில் தாரளமாக டீசல் கிடைக்கின்றது….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

ஒரு லீற்றர் டீசல் வெளியில் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையில் தாரளமாக டீசல் உள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையாக டீசல் வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக தடைப்படும் என்றார். இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலை எரிபொருள் வழங்கிய போதிலும் அதுவும் தற்போது வழங்கப்படுவதில்லை Read More

Read more

நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு….. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!!

பெற்றோல் பற்றாக்குறை காரணமாக நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும், மீண்டும் பெற்றோல் கப்பல் கொள்வனவு செய்யப்படும் வரை போதியளவு பெற்றோல் கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் பல நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள பெற்றோல் கப்பலை விடுவிக்க முடியாமல் போனதே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவுகின்ற Read More

Read more

மண்ணெண்ணைக்காக சென்றவர் பிணமாக வீடு திரும்பினார்!!

மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன்- தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தேவநாயகம் கிருஸ்ணசாமி என தெரியவந்துள்ளது. ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26/04/2022) இரவு 7மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக எரிபொருள் நிலையத்துக்கு சென்று சுமார் 12.30 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த அவர், தனக்கு Read More

Read more

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டை வந்தடைந்தது!!

இந்திய அரசாங்கம் அளித்துள்ள கடனுதவியின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நேற்று முன்தினம் (20/04/2022) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.   இந்த டீசல் கையிருப்புடன், இரண்டு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 400,000 மெட்ரிக் தொன் பல்வேறு எரிபொருள்கள் இந்திய கடன்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.   எனினும் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

Read more

நள்ளிரவு முதல் பாரியளவில் அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலைகள்!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளது.   லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே இந்த எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.   இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு விபரம் வருமாறு, • பெட்ரோல் 92 – ரூ.338 • Read More

Read more

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!!

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மூன்று அமெரிக்க டொலரால் அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை 111.37 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.24 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது எரிபொருள் சுத்திகரிப்பிற்காக பயன்படும் மசகு எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

Read more

நாளை மறுதினம் முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்….. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!!

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) நாளை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள கட்டணத்தையே தொடர்ந்தும் பேணுவதற்கு பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், எரிபொருள் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். ஆகவே Read More

Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்ற எரிசக்தி அமைச்சர் வெளியிடட தகவல்….. வாகனதாரர்கள் பெரும் மகிழ்ச்சியில்!!

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்புமென எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே (Gamini Lokuge) தெரிவித்தார். நேற்றைய தினம் எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆயினும், நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன Read More

Read more

உலக சந்தையில் வரலாற்றில் என்றுமில்லாத அளவு உயர்ந்தது எரிபொருளின் விலை….. உதய கம்மன்பில!!

உலக சந்தையில் எரிபொருளின் விலை வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 192 ரூபாய் வரையும் டீசலின் விலையை 169 ரூபாய் வரையும் கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பை கோரியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை Read More

Read more