காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்….. 6 காவல்துறையினர் படுகாயம் – பெண்கள்  உட்பட 9 பேர் கைது (காணொளி)!!

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் அத்துருகிரிய பகுதிலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது . இதன்போது, 6 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் பெண்கள்  உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஆறு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக Read More

Read more

நாடாளாவியரீதியில் மூடப்பட்டன நாற்பது எரிபொருள் நிலையங்கள்!!

வாடிக்கையாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நாற்பது எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சித்தல் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற காரணங்களை முன்னிட்டே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட எரிபொருள் கேள்வியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்திருப்பதாகவும் எரிபொருள் Read More

Read more