மட்டக்களப்பில் சிகிச்சை நிலையத்தில் வெடிப்பு சம்பவம்!!
மட்டக்களப்பு அரசடியில் இடம்பெற்ற எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று மாலை 7 மணியவில் சிகிச்சை நிலையத்தை மூடிச் சென்றபின் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாராணைகளில் தெரியவந்துள்ளது. இயங்குநிலையில் இல்லாத எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக 3 தண்ணீர் மோட்டர் இயந்திரம் மற்றும் குறித்த அறையின் கதவு உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Read more