50 இலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது குறைந்த பட்ச கட்டணம்….. வெளியானது விசேட வர்த்தமானி!!

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று(01/02/2024) முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தொடருந்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவை தவிரவும், இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியில், இக்கட்டண அதிகரிப்பானது நேற்று(01/02/2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை திருத்தம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல Read More

Read more

மருந்துகளுக்கான திருத்தப்படட விலைகளுடன் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி!!

அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.   அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read more

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சரினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Read more

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல்!!

உள்நாட்டில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, உள்நாட்டில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து 2018 செப்டெம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Read more