க.பொ.த சாதாரண தர விண்ணப்பதாரிகள், பரீட்சை சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு MOE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன ( L.M.D. Dharmasena) தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கடந்த ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியாக இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) Read More

Read more

தவணை பரீடசைகள் தொடர்பில் கல்வியமைச்சு விசேட சுற்றறிக்கை!!

அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் கல்வி Read More

Read more

சாதாரண தர பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி !!

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.   செயன்முறை பரீட்சைகளை தவிர்த்து வெளியிட தீவிரமாக ஆலோசித்துவருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 622,000 மாணவர்களில், 170,000இற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறை பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, Read More

Read more

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கிடைக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகளை விரைவாக வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றோம். இதேவேளை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முழுமையாக முடிவு எடுக்கப்படவில்லை. கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களைத் ஆரம்பிப்பதற்காக நாங்கள் பணியாற்றி Read More

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நாளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளது. குறித்த பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருந்துகொண்டே இவர்கள் பரீட்சை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் சாந்தி செனவிரத்ன தெரிவித்தார். அந்த வகையில் கரந்தெனிய மற்றும் ஹிக்கடுவ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மாணவர்களும் ஒரே மருத்துவமனையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை Read More

Read more