ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17.8 மில்லியன் பணம் தொடர்ப்பில்….. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் 17.8 மில்லியன் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மொத்தம் ரூ. 17,850,000 ரூபாவை கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். பணத்தை கண்டுபிடித்த குழுவினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த காவல்துறை குழுவினர் பணத்தை சேகரித்துள்ளனர். பணத்தை மீளப்பெற்றது தொடர்பில் காவல்துறையினர் இன்று (11/07/2022) நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்ககாரர்களை இணைக்க பிரதமர் முடிவு….. அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ!!

சிறிலங்கா நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம‘ ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவரை இணைத்துகொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார் என புதிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைத் தொடராலாம். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை Read More

Read more

“கோட்டா கோ கம”விற்கு சைக்கிளில் வன்னியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நபர்!!

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது – 32) என்ற நபர் விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த துவிச்சக்கர வண்டிப் பயணம் நேற்று (20/05/2022) மாலை வவுனியாவை சென்றடைந்தது. வவுனியாவை அடைந்த அவர் இன்று (21) அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்தார். கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் Read More

Read more

‘கோட்டா கோ கம’விற்கு வந்த கடித்ததால் பரபரப்பு!!

கொழும்பு அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட களத்திற்கு இலங்கை தபால் திணைக்களத்தின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடித உறையில் முகவரியாக கோட்டா கோ கம, காலிமுகத் திடல் போராட்ட களம், கொழும்பு 1 என அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கடிதத்தை தபால்காரர் ஒருவர் எடுத்துச் சென்று அங்குள்ளவர்களிடம் வழங்கியுள்ளார். கோட்டா கோ கம போராட்ட களத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்கிருந்து கடிதம் அனுப்பி Read More

Read more

ஜனாதிபதி பதவி விலகுவது ஒருபோதும் நடக்காது….. பிரதமர் ரணில் பகிரங்கம்!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் Read More

Read more

டொலர்களோ ரூபாய்களோ நாட்டில் இல்லை ‘ஹர்ஷ டி சில்வா’ அதிர்ச்சி தகவல்!!

தற்போது நாட்டில் டொலர்களோ ரூபாய்களோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டைக் ஆட்சி செய்யும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்ட அவர்,   ஹர்ஷ டி சில்வா  அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும்   “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் Read More

Read more

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு – சற்றுமுன் அறிவிப்பு

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (மே – 11) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.    

Read more