அரசுக்கு எதிராக அரச அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டம்!!

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (21/04/2022) அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின்  48 ஆவது அமர்வு நேற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை உறுப்பினர்கள் சபையில் கறுப்புப் பட்டி அணிந்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கத்திற்கு Read More

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! வெளியிடப்பட்டது சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மாதாந்தம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே, அது தொடர்பான சுற்றறிக்கை தற்போது வெளிடப்பட்டுள்ளது.    

Read more

வெளிநாட்டு பணம் அனுப்பும் தொழிலாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு உத்தியோகபூர்வ வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வரும் பணம், 2021 நவம்பரில் மேலும் குறைந்துள்ளது. நவம்பர் 2021 இல் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் பெறப்பட்ட பணப்பரிமாற்றத்தின் 611.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் Read More

Read more

சீனி விலை அதிகரிப்பை தடுக்க, இறக்குமதியாளர்களால் வழங்கப்பட் ஆலோசனை!!

சீனி விலையை கட்டுப்படுத்த இறக்குமதியாளர்கள் தீர்வொன்றை தெரிவித்துள்ளனர். இதன்படி சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு வழங்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம்(Lasantha Alagiyawanna) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சீனி இறக்குமதியை முறைப்படுத்தி கட்டுப்பாட்டு விலையில் வழங்க முடியும் என சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (27) பிற்பகல் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளது. சீனிக்கு Read More

Read more

சிங்கப்பூர் நிறுவனத்துக்கு  வழங்கப்பட்டது, இலங்கைக்கு  டீசல் இறக்குமதிக்கான நீண்டகால அனுமதி!!

இலங்கைக்கான  டீசல் இறக்குமதிக்கான நீண்டகால அனுமதி சிங்கப்பூர் நிறுவனத்துக்கு  வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டள்ளது. 2022.01.01 தொடக்கம், 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 + 10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் Read More

Read more

பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்…. அமைச்சர் சரத் வீரசேகர!!

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரேனும் அழுத்தம் கொடுத்தால் அதிபர், ஆசிரியர்கள் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இந்த எச்சரிக்கையை விடுத்த சரத் வீரசேகர, ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுவதாக Read More

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது கவனயீர்ப்பு போராட்டம்!!

அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாடு தழுவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் 7 Read More

Read more

பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்….. இலங்கை அரசாங்கம்!!

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் இன்று முதல் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை Read More

Read more

தெற்கிலிருந்து வடக்கு வரை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள்!!

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை இந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் Read More

Read more

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு!!

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்புச் சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்புச் சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More

Read more