அரசுக்கு எதிராக அரச அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டம்!!

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (21/04/2022) அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின்  48 ஆவது அமர்வு நேற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை உறுப்பினர்கள் சபையில் கறுப்புப் பட்டி அணிந்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கத்திற்கு Read More

Read more

பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்….. இலங்கை அரசாங்கம்!!

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணம் இன்று முதல் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை Read More

Read more

“ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவுகிறது” – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பதிலடி!!

ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவியதாகவும், சில ஆசிரியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டுவரும் பொது கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான் கொடவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வசந்தா ஹந்தபஹான் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல், அடிப்படையற்ற கருத்துக்களை ஊடகளுக்கு வெளியிடுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு சார்பான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளுக்கு சேறு பூசுகின்ற முயற்சிகளை Read More

Read more

இதற்கு மேல் 2000/= வழங்க முடியாது -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

அரசாங்கம் எதிர்கொள்ளும் பெரும் நிதி நெருக்கடியால், 2000 ரூபா தொகையை விட அதிகமாக வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு உத்தரவின் போது வாழ்வாதாரத்தை இழக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதாக இல்லை Read More

Read more