மாத்தறையில் பதற்றம்….. காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு!!

மாத்தறை திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் ​​அதனை நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாகி இயங்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவன் தற்போது Read More

Read more

நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!

தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் . கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு, சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் Read More

Read more

துப்பாக்கிச் சூட்டால் குறைந்தது 10 பேர் கொலை!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் Buffalo நகரிலுள்ள 18 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் அங்காடிக்குள் நுழைந்த இளைஞர், கையடக்கத் தொலைபேசி கெமரா ஊடாக ஒன்லைனில் தாக்குதலை நேரலையை ஔிபரப்பியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

Read more

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் பல துப்பாக்கிச் சூடுகள்!!

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் சற்றுமுன் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் நீடிக்கும் நிலையில் துப்பாக்கிச் சூடு Read More

Read more

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு….. மூவர் படுகாயம்!!

நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மூவர் காயமடைந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனத்தை Read More

Read more

28 வயதுடைய நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை!!

மாத்தறை – கொஸ்கொட பகுதியில் நபரொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 28 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

ரம்புக்கனை துப்பாக்கிசூடு -ஐநா, அமெரிக்கா மற்றும் கனடா கடும் கண்டனம்

ரம்புக்கனையில் இன்றையதினம் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்திற்கு ஐ.நா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.    

Read more

கலவரக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூட்டு தாக்குதல்….. ஒருவர் மரணம் – கவலைக்கிடமான நிலையில் இருவர்!!

ரம்புக்கனையில் பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்தை பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி முற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்   தற்போது ரம்புக்கனை பகுதியில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read more

நள்ளிரவில் வாடகை வீட்டில் நபரொருவர் சுட்டு கொலை!!

தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர். தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில்வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து திரும்பி வந்த குறித்த நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த  நபர் நள்ளிரவு 1 மணி அளவில் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த போதே நான்கு பேர் கொண்ட குழுவால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கொலை குற்றத்தில் Read More

Read more