எதிர்வரும் 06 மற்றும் 11 ஆம் திகதிகளில் முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால்….. இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க!!

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11/05/2022 ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க Read More

Read more

வர்த்தக நிலையங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் திறந்தாலும் மக்கள் நடமாட்டம் யாழில் பயங்கர வீழ்ச்சி!!

நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதுடன்  வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறந்துள்ளன. எனினும், மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றனர். அதேவேளை, பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more