சரக்கு புகையிரதத்தில்  முன் பாய்ந்து 28 வயது யுவதி தற்கொலை!!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு புகையிரதத்தில்  முன் பாய்ந்து யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(09/08/2023) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி ஹட்டன்  நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும், குறித்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் Read More

Read more

மதுபோதையில் தள்ளாடிய அம்புலன்ஸ் வண்டி….. மூன்று முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்து – மூவர் படுகாயம்!!

மதுபோதையில் நோயாளிகாவு வண்டியை(Ambulance) செலுத்தியதன் காரணமாக ஹட்டன் அளுத்கம பகுதியில் முச்சக்கரவண்டிகளுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த நோயாளிகாவு வண்டியானது டிக்கோயா பகுதியில் இருந்து ஹட்டன் நகரை நோக்கிச்சென்றது.   அவ்வேளை, இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி, Read More

Read more

மண்ணெண்ணைக்காக சென்றவர் பிணமாக வீடு திரும்பினார்!!

மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன்- தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தேவநாயகம் கிருஸ்ணசாமி என தெரியவந்துள்ளது. ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26/04/2022) இரவு 7மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக எரிபொருள் நிலையத்துக்கு சென்று சுமார் 12.30 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த அவர், தனக்கு Read More

Read more

மூடப்பட்டது பாசலை….. 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையே பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு காலையில் பாடசாலைக்கு சென்ற 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 07.40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக் கட்டடம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டினை Read More

Read more

ஹட்டனில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!

ஹட்டனில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று பிற்பகல் 02 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹட்டன் நகர பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விக்கடனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸில் மோதுண்டு விழுந்த இளைஞன் பஸ்ஸின் பின் Read More

Read more

100 அடி பள்ளத்தில் வீழ்ந்த வாகனம்! ஆபத்தான நிலையில் இருவர்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை பகுதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வலபனையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கனரக வாகனமே கினிகத்தேனை பிட்டவல பகுதியில் களனி ஆற்றிற்கு நீர் வழங்கும் ரம்புக்பத் ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. சாரதியின் கட்டுப்படை இழந்து வாகனம் விபத்திற்குள்ளானதுடன்,சாரதி மற்றும் நடத்துனர் காயமுற்ற நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.  

Read more