டீசல் விலை அதிகரிப்பு – பேருந்து கடடனங்களில் எதிரொலி….. முழுமையான விபரங்கள்!!

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நேற்று(01/02/2024) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்துக் கட்டணத்தில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும் இதுவரையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய மற்றும் முன்னைய எரிபொருள் Read More

Read more

நாட்டில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும்!!

இலங்கையில் அடுத்த  ஆண்டில் (2024) பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். அரசு மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதீட்டு ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Read More

Read more

தேசிய அடையாள அட்டை வழங்கும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை!!

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, “தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2000 ரூபாவாக இருக்க வேண்டும். அ‌த்துட‌ன், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஒன்லைன் முறையில் சமர்பித்தால் 25 ரூபாவாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் ஜெனரலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ Read More

Read more

குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாக உயர்வு !!

நாளை (27/06/2022) முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இதன்படி, 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முமுடிவெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

அதிகரிக்கப்பட்டது பேருந்து கட்டணம்….. முழுமையான விபரங்கள்!!

புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று வெளியிட்டுள்ளது இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1,303 முதல் 1,498 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சடுதியாக ஏற்பட்ட எரிபொருளின் விலையேற்றம் காரணமாக பேருந்து கட்டணத்தினை அதிகரிக்குமாறு கோரியிருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more