பூசகர்களிடையே யார் முன்னிற்பது என முரண்பாடு – தடைப்பட்ட ஆலய மகோற்சவம்….. நீதிமன்று சென்று முடிவெடுத்த நிர்வாகம்!!

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலை ஏற்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென கமல்ராஜ் குருக்கள் மற்றும் சிவதர்சக்குருக்கள் ஆகிய இரண்டு பூசகர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. முரண்பாடு முற்றிய நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆறாம் Read More

Read more

ஹெரோயின் உள்ளெடுத்த பூசகர் மரணம்….. நல்லூர் பகுதியில் சம்பவம்!!

ஹெரோயின்(Heroin) போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் கோவில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் – நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கோவில் பூசகரே நேற்று(08/06/2023) உயிரிழந்துள்ளார். நேற்று(08/06/2023) மாலை ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

Read more

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது….. ஆலய பரிபாலன சபையினர்!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளனர். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியான நிலையில், நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் Read More

Read more

நாவலரின் 192 ஆவது குருபூசை தினம்…..அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்க யாழில் திட்டம்!!

ஆறுமுக நாவலர் பெருமானின் 192 ஆவது குருபூசைத் தினத்தை முன்னிட்டு பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுபூராகவும் அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நூலகம் அமைக்கும் திட்டம் இன்று யாழ்ப்பணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஆறுமுக நாவலர் பெருமானின் 200வது Read More

Read more

வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற பாடல்களை மட்டுமே இனி இசைக்க வேண்டும்….. மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!!

மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் பிற மத விழாக்களில், வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற வகையிலான பாடல்களை மட்டுமே இசைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சில பண்டிகைகளில் சமயச் சடங்குகளுக்குப் பொருந்தாத பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், சமய விழாக்களை சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடத்த வேண்டும் எனவும் அமைச்சகம் தெரிவிக்கிறது. வழிபாட்டுத் Read More

Read more

எம் யாழ் மண்ணின் அடையாளம் நல்லூரானே….. இளைஞர்களின் முயற்சியில் வெளியான காணொளிப்பாடல்!!

ஈழத்து பெரும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற நல்லூர் ஆலய பெரும் திருவிழா தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சியில் எம்பெருமானுக்கு “எம் யாழ் மண்ணின் அடையாளம் நல்லூரானே…!” எனும் பொருள்பட புதிய காணொளி பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். பாடல் வரிகளை தொல்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிரோஜன் எமுதியிருக்க, A.R.அபியின் குழுவின் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் ஒத்திவைப்பு!!

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்றைய தினம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் முடிவில், இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுடன் Read More

Read more

நல்லூர் கந்தனின் உற்சவம் எவ்வாறு நடைபெறும்?? மக்களுக்கு முக்கிய அறிவிப்புகள்!!

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ் மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. நல்லுர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் வருமாறு, தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற் கொண்டு நல்லூர் முருகப்பெருமானின் இவ்வருட உற்சவம் முழுமையான சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாகப் பேணி அடியார்களின் பங்குபற்றுதலின்றி அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடனேயே Read More

Read more

இந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு- விடுக்கப்பட்ட கண்டனம்!

வவுனியா சுத்தானந்தா இந்துஇளைஞர் சங்கத்தின் பதில் தலைவரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டமை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என சர்வதேச இந்துஇளைஞர் பேரவையின் உபதலைவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான பிரபாகரன் யானுஜன் விசனம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நேற்றய தினம் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் நிர்வாகத்தெரிவுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது பதில் தலைவரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் “உ சிவமயம் மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற Read More

Read more