34000km உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள் இன்று மாலை புறப்பட தயார்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘இன்சாட்-3 டிஎஸ்‘(INSAT-3DS) எனும் செயற்கைக் கோளை இன்று(17/02/2024) விண்ணில் ஏவவுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. இன்சாட்-3டிஎஸ்(INSAT-3DS) செயற்கைக்கோள் 2275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் Read More

Read more

சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது – 800+ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையால் கொலை…. மதிமுக செயலாளர் வைகோ!!

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் இலங்கையிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். மாகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாள் சோக மயமான நாள், 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள், தேசப் பிதா Read More

Read more

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் முதல் மனைவி….. விநோத நடைமுறை!!

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், ராம்தேவ் கிராமத்து மக்கள் தங்களது பழமையான பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர். குறிப்பாக, முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை Read More

Read more

பழங்குடியின 11 வயது மாணாவியை நாசம் செய்த…. அதிபர் மற்றும் ஆசிரியர்!!

இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களா சிறுமிக்கு அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை சோதனை செய்த வைத்தியர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். இந்நிலையில், அந்த மாணவி பெற்றோரிடம் நடந்த Read More

Read more

ICC உலகக்கிண்ணம் 2023….. அரையிறுதிக்கான உத்தியோனிகபூர்வ திகதிகள் வெளியீடு!!

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கான உத்தியோனிகபூர்வ  திகதிகள் ICC மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இப்போட்டி வருகின்ற 15 ஆம் திகதி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 16 ஆம் திகதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா அணி தற்போது அதிக Read More

Read more

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை….. திடீரென இடைநிறுத்தம்!!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’(Gaganyaan) திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, TV-T1 விண்கலம் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று (21/10/2023) காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் தாமதம் ஆகலாம் என கூறப்பட்டது . இந்நிலையில், காலை 8.45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த சோதனை Read More

Read more

ஆசிய விளையாட்டு 2023 பெண்கள் கபடி போட்டி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!

பீஜிங்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.  

Read more

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திராயன் 3 விண்கலம்….. நிலாவின் தென்துருவதில் கால்பதித்த முதல் நாடாக இந்தியா சாதனை!!

உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றிப்பயணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தரையிறக்க காட்சியை இணையவழியில் நேரலையாக பார்த்துள்ளார். இதன்மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் Read More

Read more

இந்தியா எடுத்த திடீர் முடிவு….. இலங்கையில் ஏற்பட்ட தாக்கம்!!

வெங்காயத்துக்கு 40% ஏற்றுமதி வரியை விதிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்த நிலையில் இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 50 தொடக்கம் 70 ரூபாய் வரை அதிகரித்து 200 முதல் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியாவில் வெங்காய விலை அதிகரித்துள்ளதன் காரணமாக டிசம்பர் 31ஆம் திகதி வரை மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது. இதன் Read More

Read more

இரு வருடத்திற்கு மாத்திரம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டது….. டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானம்!!

இலங்கை விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்று(Tonier-228 maritime surveillance aircraft) பதிலீடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின்(Tonier-228 maritime surveillance aircraft) வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்கான இன்று (16/08/2023) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் Read More

Read more