இந்தோனேசியாவில் பாரிய எரிமலை வெடிப்பு…. இதுவரையில் 11 பேர் உயிரிழப்பு – காணாமல் போயுள்ள மேலும்12 பேர்!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமாத்திராவின் மேற்கு மாகாணத்தில் நேற்று (03/12/2023) 2891 மீற்றர் உயரத்தில் இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 11 பேர் உயிரிழந்ததுடன் 3பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளதுடன் வீதிகள் மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசுபிக் Read More

Read more

இந்தோனேசியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29/08/2023) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சுனாமி அபாயம் ஏதுவும் இல்லை என இந்தோனேசிய மற்றும் அமெரிக்க புவியியல் முகவர் நிலையங்கள் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Read more

இந்தோனேசியாவில் வானிலை, காலநிலை எதிலும் மாற்றம் இல்லாமல்….. திடீரென 6.0 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேற்கு இந்தோனேசியாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், கடுமையான பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் (30 மைல்) மையமாக இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் Read More

Read more

இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்!!

இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குறித்த இந்த நிலநடுக்கத்தினால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என மேலும் அறிய முடிகிரிசாது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் Read More

Read more

இந்தோனேசிய அரசாங்கம் மூலம் 570 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் கிடைத்தது!!

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தோனேசிய அரசாங்கம் முதன்முறையாக 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களையும் சத்திரசிகிச்சை உபகரணங்களையும் நேற்று மாலை (28/04/2022) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவித் தொகை 3100 கிலோகிராம் எடையுடையது. இந்த மருத்துவ உதவித் தொகையில் குறிப்பாக புற்றுநோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு Read More

Read more

17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் Read More

Read more

இந்தோனேஷியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாடு!!

இந்தோனேஷியாவின் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு இந்தோனேஷிய அரசாங்கம், உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒக்சிஜனுக்காக தட்டுப்பாட்டினால் 63 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் நாளாந்தம் 25,000 இற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. வேகமாக பரவும் டெல்டா வைரஸ் பிறழ்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தென்கிழக்காசியாவில் கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தோனேஷியா பதிவாகியுள்ளது. இதுவரை 2.3 மில்லியன் கொரோனா நோயாளர்கள் Read More

Read more