அல்வாயில் பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்த முயற்சி!!

பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போதே 4 வயது சிறுமியை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்கம் பேத்தியாருடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தார். சிறுமியும் சிறுமியின் சகோதரனும் அருகே உறங்கிக் கொண்டிருந்தார்கள்.   இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை(06/06/2022) நள்ளிரவு 12 மணி அளவில் சிறுமியை Read More

Read more

நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!

தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் . கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு, சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் Read More

Read more

சிறுமி “பாத்திமா ஆயிஷா”வின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது….. குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி!!

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.   இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.   9 வயது சிறுமி ‘ஆயிஷா’ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் கைது….. Read More

Read more

யாழில் விளையாட்டில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரும் பறிபோனது!!

அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வந்துடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் அலைபேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு உயிரை மாய்த்துள்ளனர். “நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கிலிட்டு சடலமாக காணப்பட்டார். எப்போதும் பப்ஜி Read More

Read more

இளம் யுவதிகள் இருவர் கைது!!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது 31 வயதுடைய பெண் ஒருவர் 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த Read More

Read more

நள்ளிரவில் வாடகை வீட்டில் நபரொருவர் சுட்டு கொலை!!

தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர். தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில்வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து திரும்பி வந்த குறித்த நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த  நபர் நள்ளிரவு 1 மணி அளவில் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த போதே நான்கு பேர் கொண்ட குழுவால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கொலை குற்றத்தில் Read More

Read more

அரியாலையில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு….. அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைப்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா வயது 42 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் அப்பகுதியில் உள்ளவர்கள் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி காணாமல் போயிருந்தார். காணாமல் போனமை தொடர்பில் உறவினர்களால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், காவல்துறையினருக்கு நேற்றைய Read More

Read more

பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதல்….. சம்பவ இடத்திலேயே இருவர் மரணம்!!

அலவ்வ – கிரியுல்ல பிரதான வீதியின் மிரிஹெலிய பிரதேசத்தில் நேற்று(28/03/2022) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது ​​எதிர்திசையில் வந்த பாடசாலை வானுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். அலவ்வ, உதகன்கந்த பகுதியைச் சேர்ந்த சிறினிமல் விக்கிரமசிங்க (37) மற்றும் பிரியங்கர சம்பத் (32) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அலவ்வ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

காதல் தொடர்பால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை!!

காதல் தொடர்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் நேற்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடவத்தை ஆன்ட்ரூ ஒழுங்கை பிரதேசத்தில் நடந்துள்ளது. பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் கண்ணாடி துண்டால் நபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 20 வயதான நபர் எனவும், அவர் கடவத்தை கோணஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சடலம் ராகமை Read More

Read more

நள்ளிரவில் கருகிய நிலையில் தாயும் மகளும் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு (20 01.2022) தாயும் அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் நடைபெற்றவேளை, குடும்பசுமை காரணமாக தந்தையும் மகனும் வெளிமாவட்டத்தில் கூலிவேலைக்கு சென்றிருந்தனர். 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி (07பிள்ளைகளின் தாயார்), அவரது மகள் Read More

Read more