காவல்துறை காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வெலிக்கடையில் காவல்துறை காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25/08/2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தபிறப்பித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு- தடயவியல் பொலிஸார் களத்தில்; தந்தை கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். பிறைந்துறைச்சேனை ஐஸ் உற்பத்தி நிலைய பின் வீதியில் வசிக்கும் நளீம் காபில் என்ற நான்கு வயதுடைய குழந்தையே இன்று வியாழக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்;கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், குழந்தையின் சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு Read More

Read more

நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்- ஆபத்தான நிலையில் நபர்!

திருகோணமலை மவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில் அக்போபுர 87 ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் 36 வயதுடைய ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரனையிலிருந்து கந்தளாய் பகுதிக்கு Read More

Read more

வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்துகிடக்கும் நபர்! பல்வேறு கோணங்களில் ஆரம்பமான விசாரணை

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிரென உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகுஇஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு வயலுக்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது விபத்தில் இறந்தாரா? என்பது தொடர்பான பிரேத Read More

Read more

ஹட்டனில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!

ஹட்டனில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று பிற்பகல் 02 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹட்டன் நகர பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விக்கடனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸில் மோதுண்டு விழுந்த இளைஞன் பஸ்ஸின் பின் Read More

Read more