மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் (Lebanon) உள்ள ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது திடீரென இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே கடந்தாண்டு தொடங்கிய இந்த போர், தற்போது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸை தொடர்ந்து ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருவதுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவும் கடந்த மாதம் கொல்லப்பட்டார். Read More

Read more

மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: குற்றம் சாட்டியுள்ள மனித உரிமை அமைப்பு

மனிதாபிமான வலயமாக அறிவிக்கப்பட்ட அல்-மவாசி (Al-Mawazi), கான் யூனிஸ் (Khan Yunis) மற்றும் ரஃபாவில் (Rafah) உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய (Israel) இராணுவம் நடத்திய 15 தாக்குதல்களை தங்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக அல் மெசான் மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 248க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட, 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அல்-மவாசி பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பாழடைந்த கூடாரங்களில் அத்தியாவசிய Read More

Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர் : அமெரிக்கர்கள் காசா பயணத்தை தவிர்க்கவும் – பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

Read more