ஆரம்பமானது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் (Department of Posts) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் (27.10.2024) குறித்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார். அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு (Colombo) மாவட்ட வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால், Read More

Read more

விசேட பொது விடுமுறை தினம்….. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அதிரடி அறிவிப்பு!!

ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் திகதியை (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார். இதுவேளை, எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (21/09/2024) Read More

Read more

தொடரும் சீரற்ற காலநிலை….. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளன முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22/05/2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது Read More

Read more

தமிழர் உரிமைப் போரில் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தலுக்கு….. பொருட்களை சேகரிக்க யாழ் பல்கலை மாணவர்களின் புதிய திட்டம்!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை. அந்தவகையில், இவ்வாண்டும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளை தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசங்களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Read More

Read more

யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய….. நான்கு உணவகங்களுக்கு அரக்கு முத்திரை(Seal)!!

யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் அரக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் வண்ணார் பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் என்பன திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஏற்கனவே, பல தடவைகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் 03 உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பன சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய Read More

Read more

அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாழ் இளைஞனுடையது….. முழுமையான விபரங்கள்!!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(05/11/2023) மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும் இந்தநிலையிலேயே இன்றையதினம்(06/11/2023) குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது. முகத்திலும் உடலிலும் அடிகாயங்களுடன்….. வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்!!

Read more

படகு மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற யாழ் இளைஞன் உயிரிழப்பு!!

பிரான்ஸில் இருந்து லண்டனுக்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞரும் இன்னும் சில நபர்களும் இணைந்து லண்டனுக்கு சட்டவிரோதமாக படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது படகு புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கடலுக்குள் விழுந்த குறித்த நபரை படகில் இருந்த ஏனையவர்கள் Read More

Read more

22 வயது யாழ்ப்பாண இளைஞர் போலி ஆவணங்களுடன் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார். எனினும், இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது Read More

Read more

யாழ் – வவுனியா அரச பேருந்தினுள் நடுவழியில் நாகராணி….. அலறியடித்த பயணிகள்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எதிர்பாராதவிதமாக பெரிய நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைத்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தால் பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளனர். காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகியும் பயணிகள் யாரும் நாகப்பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் வாகனத்தின் எல்லைக்குள் நாகப்பாம்பைக் கண்டுள்ளார். நாகப்பாம்புடன் பேருந்தை தொடர்ந்து இயக்கிய சாரதி Read More

Read more

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தருக்கு நிகழ்த்த சோகம்!!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த நபர் ஒருவர் இன்றைய தினம் (28/08/2023) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்ற 57 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நாளாந்தம் பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்சணை எடுத்தல் போன்ற தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்றையதினமும்(28/08/2023) Read More

Read more