பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர் யாழ் போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதன்படி, இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து சென்றுள்ளதுடன் தேசிய மருந்து தட்டுப்பாடு அபாய நிலை காரணமாக சத்திர சிகிச்சை கூட செயற்பாடுகளை பாரிய அளவில் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும், அவசர நரம்பியல் சத்திர சிகிச்சைகளும் Read More

Read more

காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைகள்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. அதனால் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைத்துள்ளோம். அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more