ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் குதித்த ஆசிரியர் உதவியாளர்கள்!!
மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக இருக்கின்ற 380 பேருக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஆசிரியர் உதவியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டமானது இன்றைய தினம் கண்டியில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆசிரியர் உதவியாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் பல வருடங்களாக போராட்டம் செய்து வருகின்ற பொழுதும் எங்களுக்கான நியமனத்தை வழங்குவதில் மத்திய மாகாணம் இழுத்தடிப்பு செய்து வருகின்றது. ஏற்கனவே, பல முறை எங்களுக்கு நியமனம் வழங்குவதாக கடிதம் அனுப்பியிருந்த போதிலும் Read More
Read more