யாழ்.பீச் ஹோட்டலில் இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை(காணொளி) !!

யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், Read More

Read more

நெல்லியடி, கரணவாய் மேற்கு பகுதியில்….. 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் மேற்கு, அந்திரான் பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நேற்றிரவு (23) குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Read more

J/348, J/350 பிரிவுகளில் “திடீர் மினி சூறாவளி”….. 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு (புகைப்படங்கள்)!!

யாழ்ப்பாணம் – கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரணவாய் பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா (T.N Suriyaraja) தெரிவித்துள்ளார். நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்த சேத விவரங்கள் பதிவாகியுள்ள அதே வேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை Read More

Read more

16 வருடங்களின் பின்னர் திருடன் கைது…… வடமரட்சியில் சம்பவம்!!

16 வருடங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டவரை காத்திருந்து நெல்லியடி  கைது செய்துள்ளனர். நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மகா வித்தியாலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு இரவு நேர காவலாளியை கட்டிவைத்து சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைவிரல் அடையாளங்களை பரிசோதித்து வைத்திருந்த பொலீஸார் நேற்று வல்லை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த நபர் நவாலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்!!

யாழ்பாணம் – கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக J/350 கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதியில் (அண்ணாசிலையடி)  சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைபரபடுத்தப்பட்டு குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது.  

Read more