தொடரும் சீரற்ற காலநிலை….. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளன முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22/05/2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது Read More

Read more

34000km உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள் இன்று மாலை புறப்பட தயார்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘இன்சாட்-3 டிஎஸ்‘(INSAT-3DS) எனும் செயற்கைக் கோளை இன்று(17/02/2024) விண்ணில் ஏவவுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. இன்சாட்-3டிஎஸ்(INSAT-3DS) செயற்கைக்கோள் 2275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் Read More

Read more

இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க பொது இராஜதந்திர துணைச் செயலாளர்!!

அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு அவர் விஜயம் செய்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது. நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக இந்த விஜயம் அமைகின்றது. இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை Read More

Read more

டீசல் விலை அதிகரிப்பு – பேருந்து கடடனங்களில் எதிரொலி….. முழுமையான விபரங்கள்!!

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நேற்று(01/02/2024) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்துக் கட்டணத்தில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும் இதுவரையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய மற்றும் முன்னைய எரிபொருள் Read More

Read more

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள்….. ஆரம்பமாகின சேவைகள்!!

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா(Sinopec) தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் கொழும்பு – மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(30/08/2023) தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு தலா 03 ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக்(Sinopec), அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்(United Petrole   Read More

Read more

காவல்துறை காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வெலிக்கடையில் காவல்துறை காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25/08/2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தபிறப்பித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

எரிபொருள் கப்பல் வருகை தெடர்பாக மகிழ்ச்சியான செய்தி!!

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால் இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

ஊரடங்கு உத்தரவில் தொடர்பான புதிய அப்டேட்!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13/05/2022) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை மதியம் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 14 ஆம் திகதி  காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

Read more

வைபவங்களில் trending ஆகியுள்ள “கப்புட்டு காக்கா காக்கா” பாடல்!!

திருமண வைபவங்களில் பாடப்படும் “கப்புட்டு காக்கா.. காக்கா…” காலத்திற்கு காலம் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதுண்டு இவ்வாறு பிரபலமாகும் பாடல்கள் பல்வேறு வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. இவ்வாறான தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான, போராட்டக் களத்திலும் அடிக்க ஒலிக்கும் பாடல் தற்போது திருமணம் வைபவங்கள் உட்பட மங்கள நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. “கப்புட்டு காக்கா காக்கா” என்ற பாடல் தற்போது திருமண வைபவங்களில் பாடப்பட்டு வருவதுடன் அவற்றில் கலந்துக்கொள்ளும் இளைஞர், யுவதிகள் Read More

Read more