Laughfs Gas நிறுவனத்தின் விநியோகம் இன்று ஆரம்பம்!!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக Laughfs Gas நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு உரிய பரிந்துரைகளுக்கு அமைய விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் தொடர்ச்சியாக வெடித்து வருவதால் மக்கள் தற்போது எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை குறைத்து விறகை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more