மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரிப்பு!!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிபருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் ஆகியோர் அந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன் Read More

Read more

சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிப்பு!!

நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விலை அதிகரிப்பு குறித்து இன்று(01/06/2022) இரவு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களுக்கு புதிய விலை!!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுபான போத்தல்களின் புதிய விலைகள் வருமாறு,  

Read more